மஹோற்சவம் - 2012
சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் 21-08-2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 தினங்கள் நடைபெறவுள்ளது. .30ம் திகதி தேர்த் திருவிழாவும் 31ம் திகதி தீர்தத் திருவிழாவும் இடம்பெறும்........
 
 
GET- TO-GATHER - 2012

Navatkuly Maha Vidyalaya old students – Canada 6th Annual Get- to-gather

Morningside Park, Area 5, Scarborough
Saturday,September 1st, 2012 9.00 A.M
 
அறிமுகம்.................
 
நாவற்குழி ஓர் வயலும் வயல்சார்ந்த ஓர் மருத நிலமாகும். இது யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் நகரம் ஆகும். இவ்விடத்தில் இருந்து ஏ32 நாவற்குழி - மன்னார் வீதி ஆரம்பிக்கின்றது. ஆனையிறவுப் பகுதியூடாகப் பிரயாணிக்கமுடியாது இருந்த காலத்தில் இப்பகுதியூடாகவே மக்கள் பிரயாணித்தனர். இதைவிட இப்பகுதியில் மீனைப் பழுதடையாது வைத்துக்கொள்ளப் பயன்படும் பனிக்கட்டித் தொழிற்சாலையும் அமைந்துள்ளது.இப்பகுதியில் யாழ் அரச அலுவலகத்தில் உலக உணவுத் திட்டத்தின் ஊடான அனுசரணையுடன் உணவைச் சேமிக்கும் களஞ்சியப்பகுதியும் காணப்படுகின்றது.